19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடுகிறது

பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், 11.00 மணி முதல் 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 20ஆம் திகதி புதன்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.

21ஆம் திகதி வியாழக்கிழமை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

22ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.ஜீ.முதுகுமாரண, சந்திரதாஸ கலப்பதி, நந்தன குணதிலக, ஜனக் மஹேந்திர அதிகாரி மற்றும் கனகசபை தம்மன்பிள்ளை ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

5

“ஆபத்பாந்தவனே என்று ஆளுநர் காலில் விழ திமுக தயாராகிவிட்டது!” – தவெக ஐடி விங் விமர்சனம்!

November 26, 2026

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து,

4

“பொது வேட்பாளரா? எவனிடமும் போய் நின்று ஆதரவு கேட்க மாட்டேன்!” – சீமான் பேச்சு!

November 26, 2026

சென்னை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் என்று கற்பனையாகச் சொல்லி வருவதாகவும், எத்தனை முறை தோற்றாலும் எவனிடமும் போய் நின்று

3

“த.வெ.க. ஆட்சி மீது நம்பிக்கை இல்லை!” – ஆளுநரைச் சந்தித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

November 26, 2026

சென்னை: த.வெ.க. ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்பதால் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்

IMG_2673

நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்!

November 26, 2026

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் ஆகியவை கடல்வழியாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

IMG_2672

கடன் வசதிகளை விரிவுபடுத்த உலக வங்கி

November 26, 2026

இலங்கையின் வர்த்தக நிறுவனங்களுக்கு நீண்டகால ரூபாய் நிதி வசதிகளை வழங்க உலக வங்கி குழுமம் புதிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்படி,

IMG_2671

அந்தமான் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு!

November 26, 2026

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதியளவில் வளிமண்டலத்தில் கீழ்மட்ட காற்றுச் சுழற்சி

IMG_2670

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள்!

November 26, 2026

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை மனநல மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை

1

“தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் மகப்பேறுகால விடுப்பு!” – முதல்வர் விஜய் உத்தரவு!

November 26, 2026

சென்னை: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கும் முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கி

925328253_4758423014391662_7712290335328054742_n

அழிக்கப்பட்ட துயிலுமில்லக் கல்லறைக் கல்வெட்டுகளுடன் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மா*வீரர் நினைவாலயம்!

November 26, 2026

மா*வீரர் நாள் இறுதிநாள் நிகழ்வுகள் நாளைய தினம் (நவம்பர் 27) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில்

ravikaran11

பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் – கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி

November 26, 2026

பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைக்கூடத் தடுக்கும் உங்களால் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்களென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

gajendra

ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்

November 26, 2026

விடுதலைப் புலிகள் அமைப்பும், ஜே.வி.பி.யும் ஆயுதமேந்திப் போராடியவர்கள் என்றாலும், இனவாதத்தின் அடிப்படையில் அவர்களை இந்த அரசாங்கம் உள்ளிட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள்

dsfs2

பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கைக்கு நாடு கடத்தப்படும் குற்றவாளிகளுக்கு புதிய பொறிமுறை

November 26, 2026

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளிநாடுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்கள் தொடர்பில் உள்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன்