முன்னணி இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஹாப்பி ராஜ்’ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
அறிமுக இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாப்பி ராஜ்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் , ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், மதுரை முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெய்வர்தா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா- மதுரை முத்து – அப்பாஸ் – ஜார்ஜ் மரியான் – ஆகியோர் தோன்றி படத்தில் பேசப்படும் விடயங்களை காட்சிகளாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
அவை பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை கலந்ததாக இருப்பதால்.. ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதிலும் சிகரட்டை காதலனுக்கு காண்பித்து தன் காதலை காதலி வெளிப்படுத்தும் காட்சி …. ரசிகர்களிடையே கொண்டாட்டமாக மாறி இருக்கிறது.