வெளியாக உள்ள திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்…

அதன்படி, தமிழில் நாளை ஏழு திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.

காந்தா:

துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கும்கி 2:

கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கும்கி 2’ படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. ‘கும்கி 2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மதராஸ் மாஃபியா கம்பெனி:

அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் ‘மதராஸ் மாஃபியா கம்பெனி’. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.

ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.

படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிணறு:

இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிணறு’. இப்படத்தில், விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது.

தாவூத்:

இயக்குவர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தாவூத். ஒரு தமிழ் நகைச்சுவை-குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் லிங்கா, சாரா ஆச்சார், ராதா ரவி, ஷா ரா, சாய் தீனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாய்: ஸ்லீப்பர் செல்:

கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் ‘பாய் ஸ்லீப்பர் செல்ஸ்’. கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.

சூதாட்டம்:

இயக்குனர் சரவணன் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூதாட்டம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா மற்றும் சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆட்டோகிராஃப்:

கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இப்படம் 21 ஆண்டுகள் கழித்து நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது.

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது