வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி

வெளிநாடு சென்று உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக மாறி வருவது ஜெர்மனி. காரணம், இங்குள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள், அந்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவசக் கல்வியை வழங்குகின்றன.

ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்பை, வெளிநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

ஜெர்மனியில் ஒட்டுமொத்தமாக 534 பல்கலைக்காகங்கள் உள்ளன. இவை, இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்கள் வரை வழங்குகின்றன.

ஜெர்மனியில் பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. இங்கு கல்லூரிகள் என்ற அமைப்புகள் இல்லை. இங்குள்ள பல்கலைக்கழகங்கள் இளநிலை பட்டப்படிப்பை 3 – 4 ஆண்டுகளிலும், முதுநிலை பட்டப்படிப்பை 1 – 2 ஆண்டுகளிலும் வழங்குகின்றன. வழக்கமான படிப்புகளுடன் கலை, இசை, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றிலும் சிறப்பான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மருத்துவம் மற்றும் சட்டப்படிப்புகளுக்கு இங்கு தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தனியார் பல்கலைக்கழகங்கள் கற்பிப்பதற்காக கட்டணம் டியூஷன் கட்டணம் வசூலித்த போதும், 322 அரசு பல்கலைக்கழகங்கள் கற்பிப்பதற்கான கட்டணத்தை வசூலிப்பதில்லை. இங்குள்ள 10ல் 9 மாணவர்கள் அரசு பல்கலைகளில்தான் பயில்கிறார்கள். அவ்வாறே கல்விக் கட்டணம் வசூலித்தாலும், மற்ற நாடுகளில் உள்ள பல்கலைகளோடு ஒப்பிடுகையில் கல்விக் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது.

நம் நாட்டில் கல்வி பயில என்னென்ன தகுதிகள் தேவையோ, அது மட்டுமே ஜெர்மனியில் பயிலவும் போதுமானதாக உள்ளது. சில பல்கலைக்கழகங்கள் தாங்கள் வழங்கும் படிப்புகளுக்கு என சிறப்பான தகுதிகளை அமைத்திருப்பதும் வழக்கம். அவையும் குறைந்தபட்ச தகுதிகளாகவே இருக்கும். இதனால் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை கிடைப்பதும் எளிதாக இருக்கிறது.

சிறந்த பல்கலையை தேர்வு செய்வதுதான் மிகவும் குழப்பமானதாக இருக்கும். காரணம், அனைத்துப் பல்கலையும் சிறப்பானதாக இருப்பதால், மாணவர்கள்தான், பல்கலைக்கழகங்கள் பற்றிய முழு விவரங்களை அறிந்துகொண்டு, தங்களுக்கு ஏற்ற பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

சில பல்கலைக்கழகங்கள், ஒரு சில படிப்புகளுக்கு மிகச் சிறந்தவையாக இருக்கும். சில சிறப்பான படிப்புகளை ஒரு சில பல்கலைகள் வழங்குகின்றன. எனவே, மாணவர்கள் அனைத்தையும் அறிந்து பல்கலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இளநிலைப் படிப்புக்கு – ஜெர்மனியின் பள்ளிக் கல்விக்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலை படிப்புக்கு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். முனைவர் பட்டத்துக்கு முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் பட்டம்பெற்றிருந்தாலோ அல்லது டிஓஇஎஃப்எல், ஐஇஎல்டிஎஸ் சான்றிதழ்கள் பெற்றிருந்தாலோ போதுமானது.

ஒரு சில பல்கலைக்கழகங்கள் மட்டும் விதிவிலக்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேராத மாணவர்கள் 1500 யூரோக்களை ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் கல்விக் கட்டணமாக வசூலிக்கின்றன.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்