இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்று மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதுடன், அவற்றில் ஒன்று வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இந்த வெடிப்பினால் எவருக்கும் எந்தவிதமான காயங்களும் அல்லது சேதங்களும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.