யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் குடத்தனை பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் , மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.