ராஜஸ்தானில் மொத்தம் 80,000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இங்கு 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தனியார் பள்ளிகள் 50,000-க்கு மேல் உள்ளன. இங்கு 84 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இடையேயான பாகுபாட்டை நீக்க ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வர ராஜஸ்தான் கல்வித்துறை ஏற்கெனவே முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனால் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் மாநில அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் சங்க தலைவர் தாமோதர் கோயல் கூறுகையில், ‘‘தனியார் பள்ளிகளின் தன்னாட்சியில் அரசு தலையிடக் கூடாது. நாங்கள் எங்களின் மதிப்பு மற்றும் விதிமுறைகள் படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சீருடையை தீர்மானிக்க தனியார் பள்ளிகளுக்கு உரிமை உள்ளது’’ என்றார்
Hindu Tamil