இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
யுனைட்டெட் சார்பாக அமட் டியல்லோ, கஸேமீரோ, ப்ரூனோ பெர்ணாண்டஸ், மதெயுஸ் குன்ஹா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். போர்ண்மெத் சார்பாக அன்டொய்னே செமென்யோ, இவானில்சன், மார்க்கஸ் டவேர்னியர், எலி ஜூனியர் குறோப்பி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.