யாழ்ப்பாணத்தின் இருவேறு இடங்களில் நகை, பணம் மற்றும் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ் நகரின் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியில் உள்ள கடை ஒன்றில், சுமார் 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வலைகள் (Nets) திருடப்பட்டுள்ளன.
கலட்டி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பணத்தைக் களவாடிச் சென்றுள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நான்கு பேரைக் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து களவாடப்பட்ட பொருட்களில் ஒரு பகுதியையும் மீட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட நால்வரிடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.