மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட குருணாகலை, மஹவ பிரதேசத்தில் உள்ள மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதற்காக இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து ரூ. 750,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுக்கொடுக்கவில்லை என பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விசாரணை அதிகாரிகள் உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொண்ட தேடுதலில், ஜப்பான் மொழிப் பயிற்சியின் போர்வையில் இந்த நிறுவனம் இயங்குவதும், தகுதியற்ற நபர்களுக்கு போலி பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய தேவையான சான்றிதழ்களைக் கள்ளத்தனமாகத் தயாரித்துக் கொடுப்பதும் கண்டறியப்பட்டது.

இதற்கமைய, மஹவ, தலதாகம சந்தியில் இயங்கி வந்த குறித்த இடத்தைச் சுற்றிவளைத்த அதிகாரிகள், அதனை நடத்தி வந்த தம்பதியினரைக் கைது செய்துள்ளனர். அந்த இடத்தை சோதனையிட்ட போது, ஜப்பானில் வேலை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள், பணப் பற்றுச்சீட்டுகள், பிரசார சுவரொட்டிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

மடிக்கணினியைச் சோதித்தபோது, பல்வேறு நபர்களின் பெயர்களில் போலியாகத் தயாரிக்கப்பட்ட இலங்கையின் பிரபல பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்கள் மற்றும் பிரபல கட்டுமான நிறுவனங்களின் சேவைச் சான்றிதழ்களை ஒத்த போலிச் சான்றிதழ் மாதிரிகள் கண்டறியப்பட்டன.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கடும் பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் குறித்த தம்பதியினருக்கு நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்சவின் மேற்பார்வையில், பணியக விசேட விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.பி. ஆரியசிங்க, பொலிஸ் பரிசோதகர் டி.பி. டி அல்விஸ் மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரி ஸ்ரீனிகா கருணாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையில் பங்கேற்றனர்.

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து