சிறந்த நடிப்பிற்காக இரு முறை தேசிய விருதினை வென்ற மூத்த நடிகை அர்ச்சனா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘மொய் விருந்து ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சி. ஆர் .மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மொய் விருந்து’ எனும் திரைப்படத்தில் அர்ச்சனா, ரக்சன், ஆயிஷா, அருள்தாஸ், மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ். கே. பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கமலக்கண்ணன் தயாரித்திருக்கிறார்.
தமிழகத்தின் டெல்டா பகுதியில் நடைபெறும் அரிய உணவு பசியாறும் சம்பிரதாயத்தை முன்வைத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்தது என்றும், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.