முன்னாள் பொலிஸ்மா அதிபர் தற்கொலை; புதிய தகவல்கள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட காரணம் நிமித்தம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வீட்டில் நேற்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

காலை உடற்பயிற்சிக்காக செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வெளியே வந்த விக்ரமரத்ன, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரது பிஸ்டல் ரக துப்பாக்கியை விக்ரமரத்ன கேட்டுப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், “துப்பாக்கியைக் கொண்டு வாருங்கள். அது புதியதா? அல்லது பழையதா? என்று பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வருமாறு கூறி, விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை வீட்டிற்குள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் சென்ற பின்னர், விக்ரமரத்ன அந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உடனடியாக செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், அவரை விரைவாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழக்கும் போது அவருக்கு 63 வயதாகும்.

விக்ரமரத்னவின் மகனின் மனைவி, வேறொருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி பிரிந்து செல்வதற்காக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த மகனின் மனைவி தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்திருந்தார்.

அங்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து விக்ரமரத்ன மிகுந்த மனவேதனையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தான் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த பொலிஸ் திணைக்களத்தின் பணியகம், தனது மகனின் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் குறித்து, உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மிகுந்த கவலையுடன் பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்ற கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

அதேபோல், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்