முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவரும் தமிழ்த் தேசிய செயல்பாட்டாளரும் வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தனும் வடமராட்சியின் ஜனநாயக அடையாளமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தனது இரண்டு சிறுநீரகங்களும் மாற்று சிகிச்சைக்கான நிதி உதவியை பொதுமக்களிடம் அண்மையில் கோரியிருந்தார்.
உலகளாவிய ரீதியில் அவருக்கான உதவிகள் வந்து கொண்டிருக்கின்ற இவ் வேளையில் சிவாஜிலிங்கம் அவர்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.