மில்டன் (Milton) அருகே நெடுஞ்சாலை 401-ன் மேற்கு நோக்கிய (Westbound) பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த பல வாகன விபத்துகள் காரணமாக, இரண்டு வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தத் தடையானது “நீண்ட நேரம்” நீடிக்கக்கூடும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறையினரின் தகவல்படி, ‘ரீஜினல் ரோடு 25’ (Regional Road 25) பகுதியில் இந்த வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு நிகழ்ந்த பல வாகன மோதல்கள் மற்றும் சாலையில் ஏற்பட்ட கடும் எண்ணெய் கசிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது.
இந்த நெடுஞ்சாலை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்த காலக்கெடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து போக்குவரத்து நிபுணர் அத்வோவா என்சியா-யெபோவா (Adwoa Nsiah-Yeboah) கூறுகையில், தற்போது இடதுபுறம் உள்ள ஒரே ஒரு வழித்தடம் மட்டுமே போக்குவரத்திற்காகத் திறந்துள்ளதால், 401 மேற்கு நோக்கிய பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் “பெரிய அளவிலான சிக்கல்களை” எதிர்கொள்வார்கள் எனத் தெரிவித்தார். இதன் காரணமாக அங்கு வாகன நெரிசல் மிக அதிகமாகக் காணப்படுகிறது.