புனரமைப்புப் பணிகள் காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ். கடுகதி மற்றும் இரவு தபால் புகையிரதம்: நாளை ஏப்ரல் 09 (வியாழக்கிழமை) முதல் தினசரி சேவையில் ஈடுபடும்.
யாழ் தேவி புகையிரதம்: எதிர்வரும் ஏப்ரல் 10 (வெள்ளிக்கிழமை) முதல் தனது சேவையை ஆரம்பிக்கும்.
‘தித்வா’ புயலால் வடக்கு புகையிரதப் பாதையின் 14 இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இந்திய அரசாங்கத்தின் 5 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இந்தப் பாதைகள் மற்றும் பாலங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மஹவ – ஓமந்தை வீதிப் புனரமைப்பு மற்றும் காசி கோட்டை யானை சுரங்கப் பாதை உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். கடுகதி (வியாழன் முதல்): – காலை 05:15 மணிக்கு கல்சிசையில் இருந்து புறப்பட்டு, பகல் 12:15 மணிக்கு காங்கேசன்துறையைச் சென்றடையும்.
மீண்டும் பகல் 01:50 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும்.
இரவு தபால் புகையிரதம் (வியாழன் முதல்):
மாலை 06:55 மணிக்கு மொறட்டுவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04:25 மணிக்கு காங்கேசன்துறையை அடையும்.
காலை 08:00 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்குப் புறப்படும்.
யாழ் தேவி (வெள்ளி முதல்):
காலை 06:40 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு, பகல் 02:35 மணிக்கு காங்கேசன்துறையை அடையும்.
பயணிகள் தங்களது பயணச்சீட்டுக்களை https://seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக முற்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.