செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் மிகமுக்கிய ஆவணத்தைத் தயாரித்த தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன் நேசையா காலமானார்!

இலங்கையின் அரச நிர்வாகத்துறையிலும், சிவில் சமூகப்பரப்பிலும் கொள்கை உறுதிப்பாட்டுடன் நீண்டகாலம் பணியாற்றியவரும், தமிழ்ச்சமூகத்தை சர்வதேச தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுமையாகவும் திகழ்ந்த கலாநிதி தேவநேசன் நேசையா அவரது 91 ஆவது வயதில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) கொழும்பில் காலமானார்.

பேராசிரியர் குணசேகரம் நேசையாவின் புதல்வரான தேவநேசன் நேசையா, கொழும்பு பல்கலைகழகத்தில் கணிதத்துறையில் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்த அவர், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.

1959 ஆம் ஆண்டு அக்காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த சிலோன் சிவில் சேவையில் இணைந்துகொண்ட அவர், அச்சேவை முடிவுறுத்தப்படுவதற்கு முன்னர் அச்சேவையில் இணைந்து பணியாற்றிய இறுதித் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து நாட்டில் யுத்தம் இடம்பெற்ற 1981 – 1984 வரையான மிகக்கடினமான காலப்பகுதியில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகவும், மாவட்டச் செயலாளராகவும் கடமையாற்றினார்.

அதுமாத்திரமன்றி வேறுபட்ட காலப்பகுதிகளில் போக்குவரத்து, சுற்றுச்சூழல், மகளிர் விவகார அமைச்சுக்களின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், யாழ் பல்கலைக்கழகப் பேரவை உள்ளிட்ட கட்டமைப்புக்களுடன் இணைந்து ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார்.

குறிப்பாக 1996 – 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட ‘யாழ் பிராந்தியத்தில் காணாமல்போனோர் பற்றிய விசாரணைக்குழு’ வின் தலைவராகவும் தேவநேசன் நேசையா செயற்பட்டார்.

அவரது தலைமையிலான குழுவினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை, இன்றளவிலும் இவ்விவகாரம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட மிகமுக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. அதேபோன்று தேவநேசன் நேசையாவின் அளப்பரிய சேவையைப் பாராட்டி 2017 ஆம் ஆண்டு அவருக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் “தேசமான்ய” விருது வழங்கப்பட்டது. இருப்பினும் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியலமைப்பு

நெருக்கடியை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட “தேசமான்ய” விருதை ஜனாதிபதி செயலகத்துக்கு நேரில் சென்று மீளக்கையளித்து, தனது கொள்கை உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினார்.

இத்தகைய நேர்மையையும், கொள்கை உறுதிப்பாட்டையும் கொண்ட ஆளுமையான தேவநேசன் நேசையா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) கொழும்பில் காலமானார்.

அன்னாரின் பூதவுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை 8.30 மணி முதல் ஏ.எஃப்.ரேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், தகனக்கிரியைகள் இவ்வார நடுப்பகுதியில் பொரளை பொதுமயானத்தில் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்