மீட்கப்பட்ட படகில் 10 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்!

இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (12) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

கடற்படையின் நீண்டதூர தேடுதல் கப்பல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகிலிருந்து சுமார் 600 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ​ஹேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், போதைப்பொருட்களுடன் அதே படகிலிருந்து 08 கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் , 02 T56 ரக துப்பாக்கிகள், 01 M16 ரக துப்பாக்கி. ( M16 ரக துப்பாக்கியானது பாதுகாப்புப் படையின் விசேட பிரிவினரால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு நவீன ஆயுதமாகும்) ஆகிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மற்றைய பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் கடத்தப்பட்ட படகிற்கு உதவியாகவும் உளவு பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

fue

இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கோரிக்கை

March 12, 2026

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது

deat

பேருந்து மிதி பலகையில் பயணித்தவர் கீழே விழுந்து பலி

March 12, 2026

பேருவளை, மஸ்ஸல பிரதேசத்தில் நேற்று (11) அதிகாலை வேளையில் பேருந்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை நோக்கி பயணித்த

Mahinda

மத்திய கிழக்கு யுத்த நிலைமை இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – மகிந்த ராஜபக்ஷ

March 12, 2026

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த

uk

ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்

March 12, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின்

sis

பாடசாலை சேவைக்கு மேலும் 200 பேருந்துகள்

March 12, 2026

சிசு செரிய பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை

anu

ஜனாதிபதி – இலங்கை மின்சார சபை தொழிற் சங்கங்கள் சந்திப்பு

March 12, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (12) முற்பகல்

s

மீட்கப்பட்ட படகில் 10 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்!

March 12, 2026

இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரூபாய் என

ki

கனடா – ஹமில்டன் பகுதியில் ‘பியர் ஸ்ப்ரே’ பாவித்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொள்ளும் குற்றங்கள் அதிகரிக்கின்றன?

March 12, 2026

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய பியர் ஸ்ப்ரே (Bear Spray) சம்பவங்கள் — குறிப்பாக தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற

drug

ஒரே நாளில் 937 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

March 12, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று புதன்கிழமை

car

கனேடிய பிரதமர் மார்க் கார்னி நேட்டோ போர் பயிற்சிக்கு விஜயம்!

March 12, 2026

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இன்று வியாழக்கிழமை கூட்டணி நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம்

ve

இராணுவ வீரர் வீட்டில் வெடிபொருட்கள்,சீருடைகள்?

March 12, 2026

பொலன்னறுவை மாநில புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, ஹிங்குராக்கொட பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட

a

முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

March 12, 2026

ஹட்டன் – டயகம பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில்