மிசிசாகா, பிராம்ப்டனில் சில்லறை வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து கொள்ளை; 65 பேர் கைது, 545 குற்றச்சாட்டுகள் பதிவு!

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) மற்றும் மிசிசாகா (Mississauga) ஆகிய நகரங்களில் சில்லறை வர்த்தக நிலையங்களை (Retail stores) இலக்கு வைத்து நடத்தப்பட்ட பாரிய அளவிலான திருட்டுச் சம்பவங்கள் குறித்த விரிவான விசாரணைகளை அடுத்து, 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது 545 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.

‘புரொஜெக்ட் பில்சர்’ (Project Filcher) எனப் பெயரிடப்பட்ட இந்த விசேட கூட்டுப் பொலிஸ் நடவடிக்கை, தொடர்ச்சியாகக் குற்றச் செயல்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளையும் (Repeat offenders) ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத் திருட்டு கும்பல்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டது. இக் கும்பல் 350 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதுடன், இதன் காரணமாக வர்த்தக நிலையங்களுக்கு 250,000 டொலருக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் விபரம்:

இவ்விசாரணைகளின் போது மிசிசாகா, ரொறன்ரோ, பிராம்ப்டன் உள்ளிட்ட பல நகரங்களைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மிசிசாகா நகரைச் சேர்ந்த ரையன் வில்லியம்ஸ் (39), யூசுப் ஹஜ்ஜார் (38), அமீர் நிக்பக்த் (41), ஜெய்டன் ஹில் (19), சுக்விந்தர் சிங் (28), மந்தீப் டூர் (48) மற்றும் ரொறன்ரோவைச் சேர்ந்த அவெரிலியன் அலெக்சாண்ட்ரோ டிராகன் (37) ஆகியோர் அடங்குவர்.

மேலும், நிரந்தர முகவரி அற்றவர்களான (No Fixed Address) நிக்கோலஸ் க்ளூயி (31), பெசில் அசாத் (21), சமந்தா சோமர்ஸ் (38), அமன்பிரீத் சாந்தவாலியா (33), ரொஷன்பீர் சிங் (27) மற்றும் ராகேஷ் பத்ரிநாராயண் (42) உட்பட 34 சந்தேகநபர்களும் இக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீல் பிராந்தியம் முழுவதும் இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத் திருட்டுகள் (Organized retail theft) தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பெரும்பாலோர் திட்டமிட்ட கூட்டுச் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் எனப் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்