அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (07.03.2026) இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர், உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த சாரதி என அறியப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் அம்பாறை மாவட்டம் நவகம்புர உதயபுர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மதிப்பிற்குரிய கோரகே தொன் சானக சதுரங்க குமார என அடையாளம் காணப்பட்டார்.
உயிரிழந்தவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்பகுதி சிறிது சேதமடைந்த நிலையில் காணப்படுவதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.