மாத்தறை ஊடகவியலாளர்கள் அமைப்பினால், நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் நேற்று (06) மாலை பொல்ஹேனகொடையில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் வழங்கப்பட்டன.
இந்த நிவாரணத் திட்டமானது “செனஹசே அத்வெல” (பாசத்தின் கரங்கள்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல மாவட்டங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல ஊடக நண்பர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்ட பின்னர், நேற்றையதினம் மாலை கொழும்பு ஊடகவியலாளர்களுக்கும் இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டன, அத்துடன் அடுத்த கட்டமாக வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் இவ்வுதவிகள் சேர்க்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாத்தறை ஊடகவியலாளர்கள் அமைப்பைச் சேர்ந்தோர், கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
C.G.Prashanthan