சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டுத் துறை சார்ந்த 32 வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டார்.
விளையாட்டு இடஒதுக்கீடு உயர்வு:
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர் தொழில்முறைக் கல்லூரிகளில் சேர்வதற்காகத் தற்போது நடைமுறையில் உள்ள விளையாட்டு இடஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் வழங்கப்படும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையில் வெளியிடப்பட்ட இதர முக்கிய அறிவிப்புகள்:
-
ஒலிம்பிக் சாம்பியன்கள்: 2036 ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு, 8 முதல் 18 வயதுக்குட்பட்ட திறமையான மாணவர்களைக் கண்டறிய ரூ.5 கோடியில் சிறப்புத் திறன் கண்டறிதல் பிரிவு உருவாக்கப்படும்.
-
ஒலிம்பிக் மையங்கள்: சென்னையில் ஒலிம்பிக் இல்லம், 10 ஒலிம்பிக் சிறப்பு விளையாட்டு மையங்கள் மற்றும் பாரா ஒலிம்பிக் சிறப்பு விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
-
விமானப் பயணக் கட்டணம்: தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு விமானப் பயணக் கட்டணம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வழங்கப்படும்.
-
சிங்கப்பெண் திருவிழா: மகளிர் விளையாட்டை ஊக்குவிக்க ‘சிங்கப்பெண் விளையாட்டுத் திருவிழா’ மற்றும் திருநர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் முதல்முறையாக நடத்தப்படும்.
-
ஜெ.ஜெ. அரங்கம் சீரமைப்பு: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கத்தின் உட்கட்டமைப்பு மற்றும் ஆடுகள வசதிகள் மறுசீரமைக்கப்படும்.
-
மைதானங்கள் மேம்பாடு: ரூ.50 கோடி மதிப்பீட்டில் 500 விளையாட்டு மைதானங்கள் முதற்கட்டமாகத் தரம் உயர்த்தப்படும்.
-
உபகரண வங்கி: அனைத்து மாவட்டங்களிலும் ரூ.15 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரண வங்கி ஏற்படுத்தப்படும்.
-
புதிய அரங்கங்கள்: பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பலதள விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
#TNAssembly #MinisterAadavArjuna #SportsQuotaTN #TVKGovernment #TamilNaduSports #Olympics2036 #SingappenSports #ChennaiNews #TNPolitics #TamilNaduNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates