மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்’ நூல் வெளியீடு

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பிலவினால் எழுதப்பட்ட ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்’ எனும் நூல் செவ்வாய்க்கிழமை (31) வெளியிடப்பட்டது.

நூல் வெளியீட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31) கொழும்பு சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, திலித் ஜயவீர உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ், டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச,அநுர பிரியதர்ஷன யாப்பா,சாகல ரத்நாயக்க, வஜிர அபேவரத்தன, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பௌத்த மத அனுஸ்டானத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க ஆரம்ப உரையாற்றி ‘ உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதை ஏற்க முடியாது. ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வருவதற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடுவதை முற்றாக நிராகரிக்கிறேன். ஏனெனில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ராஜபக்ஷர்கள் அதிகாரத்துக்கு வந்து விட்டார்கள்’ என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உதய கம்மன்பில தான் எழுதிய நூலை பௌத்த மத தலைவர்களுக்கு வழங்கி வைத்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கி வைத்தார். நிகழ்வு ஆரம்பமாகி 10 நிமிடத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிகழ்வில் இருந்து இடைநடுவே சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய உதய கம்மன்பில, குண்டுத்தாக்குதல் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்வதற்கு தான் எழுதிய புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பயங்கரவாதி சஹ்ரான் என்றும், தாக்குதல்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் 300 மில்லியன் ரூபா செலவழித்ததாகவும் குறிப்பிட்டார்.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த