மரத் தட்டுகள் (Pallet) தீப்பற்றி எரிந்ததால் மொங்க்டன் வால்மார்ட் மூடப்பட்டது!

நியூ பிரன்சுவிக், மொங்க்டனிலுள்ள (Moncton, N.B.) ‘வால்மார்ட்’ (Walmart) கிளை ஒன்று திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

பிளாசா வீதி (25 Plaza Blvd) இலக்கத்தில் அமைந்துள்ள இக்கடைக்கு வெளியே மரத் தட்டுகள் (pallets) தீப்பற்றி எரிவதாகக் கிடைத்த தகவலையடுத்து, இரவு 11 மணியளவில் கனடிய அரச கவாத்து பொலிஸார் (RCMP), தீயணைப்பு மற்றும் அவசர ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மர மற்றும் பிளாஸ்டிக் தட்டுகளில் ஏற்பட்ட தீ கட்டிடத்தின் வெளிப்புறப் பகுதியில் சில சேதங்களை ஏற்படுத்தியதுடன், புகை கட்டிடத்தின் உட்பகுதியிலும் பரவியது.

மொங்க்டன் தீயணைப்புத் திணைக்களத்தின் பதில் படைத் தலைவர் (acting platoon chief) டிம் ரொசிட்டர் கூறுகையில், 24 தீயணைப்பு வீரர்கள், ஒரு தீ விபத்து புலனாய்வாளர் மற்றும் ‘NB Power’ மின்சாரக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.

கடை உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், செவ்வாயக்கிழமையும் மூடப்பட்டுள்ளது.

“உங்களது மொங்க்டன் வெஸ்ட் வால்மார்ட் கிளை மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதுடன், இக்காலகட்டத்தில் உங்களின் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று ‘வால்மார்ட் கனடா’ (வெஸ்ட் மொங்க்டன்) தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்