பெருந்தோட்ட மக்களின் சம்பளம்; இதுவரை காலமும் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது – உபாலி பன்னிலகே

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் இதுவரை காலமும் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களுமில்லாம் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படை பிரச்சினைகள், உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வரவு – செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் என்னவென்பதை எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துரைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதையிட்டு கவலையடைகிறேன்.

வரவு – செலவு விவாதத்திலும் குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய குற்றச்சாட்டுக்களை மாத்திரமே எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர்.

அடிமட்ட மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் 78 வரவு – செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்திருக்கும், நாடும் அபிவிருத்தியடைந்திருக்கும்.

போலியான தற்காலிக நிவாரணமளித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரண்ட பொருளாதார கொள்கைகளை அடைவதற்காக 6 திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதை காட்டிலும் அவர்களை தொழிற்றுறையில் முன்னேற்றுவதற்கும் உரிய திட்டங்கள் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகை மற்றும் நிவாரணங்களை நியாயமான முறையில் வழங்குவற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களுமில்லாம் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படை பிரச்சினைகள், உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே நாங்கள் எந்த தரப்பினரையும் புறக்கணிக்கவில்லை.

இந்த வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் சிறந்த முறையில் செயற்படுத்தப்படும். அரசமுறை கடன்களை முறையாக செலுத்தும் வகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வோம் என்றார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்