சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், பெண் அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அமைச்சர் சரத்குமார் வெளியிட்டுள்ளார்.
“3-வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு”:
இதுவரை தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே 365 நாட்கள் (ஓராண்டு) மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது; மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் (3 மாதங்கள்) மட்டுமே விடுப்பு அளிக்கப்பட்டது. பிரசவத்திற்குப் பிந்தைய உடல்நலப் பிரச்சனைகளைச் சமாளிக்க இந்த 3 மாத கால அவகாசம் போதாது என நீண்ட காலமாக வைக்கப்பட்ட கோரிக்கையையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் கருத்தில் கொண்டு, இனி 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் முழுமையான மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அமைச்சர் சரத்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
பேரவையில் வெளியிடப்பட்ட இதர 10 முக்கிய அறிவிப்புகள்:
-
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக ‘வெற்றிப் பாதை’ என்ற பிரத்யேக செயலி உருவாக்கப்படும்.
-
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தின் கீழ் புதிய சமூக ஊடக கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) கூடுதல் கட்டடம் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் சிசிடிவி கண்காணிப்பு அறை அமைக்கப்படும்.
-
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் நவீன கணினி மையம் மற்றும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும்.
-
போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அறிவுசார் மையங்களுடன் இணைக்கப்படும்.
-
எளிமை ஆளுமைத் திட்டத்தின் கீழ் 150 அரசுச் சேவைகள் வழங்கப்படும்.
#MaternityLeaveTN #TNGovernmentEmployees #MinisterSarathkumar #TNAssembly #TVKGovernment #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TNPSC #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates