இசையமைப்பாளர் – நடிகர்- இயக்குநர்- பாடலாசிரியர் – பாடகர் – படத்தொகுப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பூக்கி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘லவ்வுல நீ வுழுந்தா.. எனும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ பூக்கி ‘ எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, அஜய் திஷான் ஆர். கே. தனுஷா , பாண்டியராஜன், சுனில் , லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ‘ஆதித்யா’ கதிர், விவேக் பிரசன்னா ,பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. தற்போது ‘லவ்வுல நீ வுழுந்தா ஆரம்பம் நல்லாத்தான் இருக்கும்.. பிரேக் அப்ப பண்ணி பாரு மூஞ்சி மொகரையெல்லாம் தெறிக்கும்..’ என தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விஜய் அண்டனி எழுதி, இசையமைத்து, பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கான காணொளி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.