புதுடெல்லியை தாக்கும் நோக்குடன் மருத்துவர்களைத் தீவிரவாதத்திற்குள் ஈர்த்ததாக மதகுரு கைது

புதுடெல்லியை தாக்கும் நோக்குடன் ஃ பரிதாபாத்தில் 2,900 கிலோ கிராம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், மருத்துவர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்குள் ஈர்த்ததாக கருதப்படும் காஷ்மீரை சேர்ந்த ஒரு மதகுரு (இமாம்) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியை சேர்ந்த இமாம் இர்ஃபான் அகமது வாகா அன்று கைது செய்யப்பட்டார்.

இவர் இதற்கு முன்பு ஸ்ரீநகரில் உள்ள அரசுக் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ ஊழியராகவும் (paramedical worker), பின்னர் நௌகாமில் இமாமாகவும் பணியாற்றியவர். இர்ஃபான் அகமது வாகாவின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் (radicalising) இவர்கள் ஈடுபட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சதித் திட்டத்தை “வெள்ளை காலர் பயங்கரவாதம்” (White-Collar Terrorism) எனப் பொலிஸ் குறிப்பிடுகிறது. இதில், ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) ஆகிய பயங்கரவாத அமைப்புகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் போன்ற உயர்பதவியில் உள்ளோரை தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளது.

ஃபரிதாபாத் வெடிபொருள் பதுக்கலுக்கு முக்கியக் காரணமாக இருந்த டாக்டர் முஸம்மில் ஷகீலுடன் இமாம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. முஸம்மில் வாடகைக்கு எடுத்த அறைகள் இமாமிற்கு சொந்தமானவை என்றும் கூறப்படுகிறது. மேலும், ஜெய்ஷ் அமைப்பின் மகளிர் பிரிவை உருவாக்க உதவியதாக கூறப்படும் டாக்டர் ஷாஹீனை தீவிரமயமாக்குவதில் இமாமின் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஸ்ரீநகரின் நௌகாம் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சார்பாக கடந்த ஒக்டோபர் 19 அன்று ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள், இவரால் வழங்கப்பட்டவை என்றும் கைதானவர்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில், தீவிரவாத நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் இருந்துள்ளன. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத தலைவரின் குடும்பம் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்த இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இமாம் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த மாபெரும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2026-09-14 at 07.00.38

தடைகளை நீக்கியருளும் விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று !

September 14, 2026

பிள்ளையார் பூஜை என்பது ஒருநாள் கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் நமக்கு வளமும் வளமையும் தரும் ஆன்மீக பாதையை

MediaFile_20260913_220352_145

அராலியில் இளைஞர் மீது வாள்வெட்டு – நால்வர் கைது

September 14, 2026

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

cas

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

September 14, 2026

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவின்

ac

விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி!

September 14, 2026

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே

ar 2

“தமிழ் ஈழம் வேண்டும்” என்று கேட்க மாட்டேன்; எனக்கு சிங்கள மக்கள் தான் வேண்டும்! – பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

September 14, 2026

– அனுராதபுரத்தில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்.

arr

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

September 14, 2026

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம்

u

இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் – ஐ.நா கவலை

September 14, 2026

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய

Gnansa

ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை

September 14, 2026

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து