இந்தியாவில், பிரிமியர் லீக் (‘டி-20’) 19வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சீசனில் பங்கேற்ற 10 அணிகளில் 173 பேர் தக்கவைக்கப்பட்டனர். மீதமுள்ள 77 இடங்களுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ‘மினி’ ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது. இதில் 350 பேர் (240 இந்தியர், 110 வெளிநாட்டு வீரர்கள்) பங்கேற்க உள்ளனர்.
இதில் 10 அணிகள் மொத்தம் ரூ. 237.55 கோடி செலவிட உள்ளன. கோல்கட்டா அதிகபட்சமாக ரூ. 64.30 கோடி, சென்னை ரூ. 43.40 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கின்றன. தவிர, ஐதராபாத் (ரூ. 25.50 கோடி), லக்னோ (ரூ. 22.95 கோடி), டில்லி (ரூ. 21.80 கோடி) அணிகளும் அதிக தொகை செலவிட உள்ளன. மும்பை அணி, ரூ. 2.75 கோடிக்கு கையிருப்பு வைத்துள்ளது.
இந்தியாவின் வெங்கடேஷ் ஐயர், ஆஸ்திரேலியாவின் கேமிரான் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்ரிக்காவின் மில்லர், நியூசிலாந்தின் ரச்சின், இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன், இலங்கையின் பதிரானா உள்ளிட்டோர் அதிக தொகைக்கு வாங்கப்படலாம். கிரீன், வெங்கடேஷ், லிவிங்ஸ்டன் ஆகியோரை வாங்க சென்னை, கோல்கட்டா அணிகளுக்கு இடையே போட்டி நிலவலாம்.