பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் வெறும் ஏமாற்று வேலை: சுஜித் சஞ்சய பெரேரா எம்.பி குற்றச்சாட்டு

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கும், தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிவாரணப் பொதியில் உள்ள முரண்பாடுகள்

“பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய 25,000 ரூபாயும், சேதமடைந்த உபகரணங்களுக்கு 50,000 ரூபாயும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி இந்த நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவு, மண்சரிவு மற்றும் சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், சுற்றறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை என அதிகாரிகள் கைவிரிப்பதாகத் தெரிகிறது. மக்களை ஏமாற்றாமல் இந்த நிவாரணங்களை உடனடியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

தோட்டத் தொழிலாளர்களுக்கான சிக்கல்கள்

“தோட்டத் தொழிலாளர்கள் இந்த 25,000 ரூபாய் இழப்பீட்டைப் பெறுவதற்கு தோட்ட அதிகாரியின் சிபாரிசு கடிதம் கட்டாயம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அநேகமான தோட்டத் தொழிலாளர்கள் தற்போது தோட்டங்களுக்கு வெளியே வேலை செய்வதால், இக்கடிதத்தைப் பெறுவதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான நிபந்தனைகள் இன்றி, வரி செலுத்தும் பிரஜைகளான அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.”

பாடசாலைகளின் பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்றம்

“மண்சரிவு அபாயம் காரணமாக பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்றுவது ஏழைப் பெற்றோர்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஊடாக முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பாதுகாப்புச் சுவர்களை அமைப்பதன் மூலம் அந்தப் பாடசாலைகளிலேயே கல்வியைத் தொடர வழிவகை செய்ய வேண்டும். அதேபோல், மண்சரிவு அபாய வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் குடியேறுவது தொடர்பான தெளிவான அறிக்கைகளை அரசாங்கம் விரைந்து வழங்க வேண்டும்.”

சஜித் பிரேமதாசவின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு

“கடந்த காலங்களில் ஜே.வி.பி (JVP) எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளவே முயன்றது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவ்வாறு செயற்படவில்லை. அனர்த்த நிவாரணங்களுக்காக மேலதிக மதிப்பீட்டை கொண்டு வருமாறு அவரே கோரினார். அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச மாநாட்டை நடத்தி நிதியுதவி பெறுமாறு அவர் கூறியபோது அரசாங்கம் அவரைக் கேலி செய்தது. ஆனால், இன்று அதையே செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி எப்போதும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே செயற்படுகிறது.”

உள்ளூராட்சி சபைகளின் ஜனநாயகம்

“உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் மேயர்களைத் தெரிவு செய்யும் போது, அரசாங்கம் பகிரங்க வாக்கெடுப்புக்கு அஞ்சுகிறது. இரகசிய வாக்கெடுப்பு மூலம் வரப்பிரசாதங்களை வழங்கி ஜனநாயக விரோத முறையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

By C.G.Prashanthan

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்