பெந்தொட்டை கடற்கரையில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பெந்தொட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கதிர்காமநாதன் மிதுசன் (25) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (19) நண்பர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் நீர்ச் சுழலில் சிக்கி அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, உயிரிழப்பார்ப்புப் பிரிவினர் (Lifeguards) முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் மாணவர் மீட்கப்பட்ட போதிலும், அவர் அதற்குள்ளாகவே உயிரிழந்திருந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.