பல்கலைக்கழகங்கள் சட்டமூலத்தை ஆராய்ந்து அங்கீகரித்தது துறைசார் மேற்பார்வைக் குழு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை அதிபர் சேவையில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இணைப் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் (தரம் 1) ஆகியோரிடையிலிருந்து துறைத் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்கும் துறைச் சபையை இயலச் செய்வித்தல், துறைத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய முன்னர் துறைத் தலைவர் ஒருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கு பேரவையை இயலச் செய்வித்தல் மற்றும் துறையொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலம் தொடர்பில் மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தல் போன்றவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் அமைந்திருப்பதாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தலைமையில் கடந்த 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரை நியமிக்கும் போது பேரவையினால் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறையைக் குறித்துரைத்தல், கற்கைப் பகுதியொன்றின் தலைவரினதும் பதவிக்காலம் முடிவடைய முன்னர் கற்கைப் பகுதியின் தலைவரொருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்குப் பேரவையை இயலச் செய்வித்தல், கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலங்கள் தொடர்பில் ஏற்புடையற்பாலனவான மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வதும் இந்தச் சட்டமூலத்தின் சட்டப் பயனாக அமையுமென அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட கலந்துரையாடலின் பின்னர் குறித்த சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், இலங்கை அதிபர் சேவைக்கான ஆட்சேர்ப்புக் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. 2019ஆம் ஆண்டில் 1918 வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையிலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக இங்கு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

2019ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றியவர்களிலிருந்து 2022ஆம் ஆண்டு 155 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருப்பதுடன், 2023ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய 4,672 பேரைக்கொண்ட தொகுதியினரும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், 2019ஆம் ஆண்டு பிரிவில் தெரிவாகி அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்படாத சிலர் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

எனினும், பல்வேறு காரணங்களுக்காக 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரீட்சையின் அடிப்படையில் தொடர்ச்சியாக ஆட்சேர்ப்புக்கள் இடம்பெற்றமையாலேயே இப்பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக குழு சுட்டிக்காட்டியது. ஏன் வருடாந்தம் போட்டிப் பரீட்சை நடத்தப்படவில்லையென்றும், புதிதாக ஏன் பரீட்சை நடத்தப்படவில்லையென்றும் குழு கேள்வியெழுப்பியது.

இக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ்.இராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சுகத் வசந்த.த சில்வா, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, சுஜீவ திசாநாயக்க, சானக மாதுகொட, சஞ்ஜீவ ரணசிங்க, துரைராசா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்