பலத்த சூறாவளி… மக்களுக்கு எச்சரிக்கை!

எதிர்வரும் 27 ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த சூறாவளி நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்காக தீவைச் சூழவுள்ள கடற்பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தத் தாழ்வு பிரதேசம் இன்று (25) காலை 8.30 மணியளவில் வட அகலரேகை 15.3° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 91.2° க்கு அருகில் மையம் கொண்டிருந்தது.

இத்தொகுதி இன்று வங்காள விரிகுடாவின் கிழக்கு – மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதி ஊடாக நகர்ந்து, தாழமுக்கமாக (Deep Depression) வலுவடைவதற்குக் மிக அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

இத்தொகுதி தொடர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக திசைமாறி, மேற்கு நோக்கிச் சாய்வாக வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (26) காலையளவில் சூறாவளியாகவும் (Cyclone), நாளை மறுதினம் (27) காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த புயலாகவும் மேலும் தீவிரமடைவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

வட அகலரேகை 10° – 20° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80° – 95° ஆகிய எல்லைகளுக்குட்பட்ட கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்வரும் முன்னறிவிப்புகள் மற்றும்அறிக்கைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரிடம் கோரப்பட்டுள்ளது.

இதனால் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 – 2.5 மீட்டர் வரை உயரக்கூடிய சாத்தியம் உள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த கடற்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அக்காலப்பகுதியில் கடற்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

IMG_0717

பலத்த சூறாவளி… மக்களுக்கு எச்சரிக்கை!

October 25, 2026

எதிர்வரும் 27 ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த சூறாவளி நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக

8

“என்னை களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது!” – நாஞ்சில் சம்பத் பரபரப்பு பதிவு!

October 25, 2026

சென்னை: கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மூத்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்குக் கட்சியில் கொள்கைப்

7

“தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்?” – சீமான் சரமாரி கேள்வி!

October 25, 2026

சென்னை: அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன் என்றும் இந்த ஆட்சியும்

6

“தேசிய அளவில் மின் தேவை அதிகரிப்பை மத்திய அரசு முன்கூட்டியே கணிக்காதது ஏன்?” – அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி!

October 25, 2026

ராமநாதபுரம்: தேசிய அளவில் மின் தேவை அதிகரிப்பு குறித்து மத்திய அரசு முன்கூட்டியே கணிக்காதது ஏன் என்று தமிழக மின்சாரத்

UDHAYANIDHI STALIN - 1

“அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா?” – உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

October 25, 2026

சென்னை: மக்களுக்கான கட்டணமில்லா ரேஷன் அரிசியைப் பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்றுக் கொள்ளையடிப்பதுதான் மாற்றமா என்று எதிர்க்கட்சித் தலைவர்

4

“தமிழக அரசியலுக்கு எந்த நடிகர்கள் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை!” – ஆதவ் அர்ஜுனா!

October 25, 2026

சென்னை: தமிழக அரசியலுக்குப் புதியதாக எந்த நடிகர்கள் வந்தாலும் அது குறித்து எங்களுக்குச் சிறிதும் கவலை இல்லை என்று தவெக

3

“தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் பொறுப்பு!” – வைகோ நேரடி அட்டாக்!

October 25, 2026

மதுரை: எஸ்ஐஆர் மூலமாகத் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் முழு பொறுப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர்

2

“தவெக ஆட்சியை அகற்ற தயாராகுங்கள்!” – திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்புப் பேச்சு!

October 25, 2026

சென்னை: தவெகவுக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்லாமல், வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலைதான் இந்த ஆட்சியில் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக்

1

“செஃப் தாமு மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!” – குக் வித் கோமாளி குழுவினர் அஞ்சலி!

October 25, 2026

சென்னை: பிரபல சமையல் கலை நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமு என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கே.தாமோதரன்

OpenAI

மனித உருவ ரோபோ உருவாக்கும் Open AI!

October 25, 2026

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதில் OpenAI ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். தற்போது, ​​அந்நிறுவனம் மனித உருவ ரோபோக்கள் துறையிலும்

images (1)

எடைக்குறைப்புக்கு எது சிறந்தது?

October 25, 2026

எடை குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பலரும் பிளாக் காபி மற்றும் கிரீன் டீயை தங்களது தினசரி உணவுப்

s

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளுக்கான தேவைகள்!

October 25, 2026

5 வயது பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள்