அறிமுக நடிகர் அஜய் கார்த்தி மற்றும் பிரபல நடிகர் பரத் முதன்முறையாக இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2 ‘ திரைப்படத்தில் அஜய் கார்த்தி, பரத் , ‘பூவே உனக்காக’ புகழ் சங்கீதா , பவானி ஸ்ரீ , அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில் – டொக்டர் என் . யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்த இந்த திரைப்படம் தற்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகை சங்கீதா ரீஎன்ட்ரி – பிரபல வெற்றிகரமான விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்திலின் வாரிசு அஜய் கார்த்தி நாயகனாக அறிமுகம் – திரில்லர் ஜேனர் – நடிகர் பரத் – என பல வணிக ரீதியான வெற்றிக்குரிய அம்சங்கள் இருப்பதால். இப்படத்திற்கு ரசிகர்களிடையேயும் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.