‘பயங்கரவாதம்’ வரையறுக்கப்படவில்லை; இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் – சரத் வீரசேகர காட்டம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்றைய தினம் (2025.12.22) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:
“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டமைக்காக நீதி அமைச்சருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இதனை மக்கள் கருத்துக்காகத் திறந்து விடுவதாக அவர் கூறியுள்ளார். எமது ஆலோசனைகளை அரசாங்கம் புத்திசாலித்தனமாகப் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இந்தச் சட்டத்தில் நாம் காணும் பிரதான குறைபாடு என்னவென்றால், இதில் ‘பயங்கரவாதம்’ என்பது வரையறுக்கப்படவில்லை. பயங்கரவாதம் என்றால் என்ன என்று குறிப்பிடப்படாவிட்டால், பயங்கரவாதி யார் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் எவை என்பதில் பாரிய தெளிவற்ற நிலை ஏற்படும். எல்.டி.டி.இ (LTTE) பயங்கரவாதிகள் தமிழ் தாயகத்திற்காகவும், ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாதிகள் இஸ்லாமிய தேசத்திற்காகவும் தாக்குதல் நடத்தினர். இவ்வாறான அரசியல் நோக்கத்திற்காக, போருடன் தொடர்பற்ற அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்வதுதான் பயங்கரவாதம் என அழைக்கப்பட வேண்டும்.

இது சரியாக வரையறுக்கப்படாத வரை, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை அல்லது அழுத்தங்களை ‘மக்களை அச்சுறுத்தல்’ என வகைப்படுத்தி, மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தை மிக எளிதாகப் பறிக்க முடியும்.

அதேபோல், கொலை, சித்திரவதை, பணயக்கைதிகளாக வைத்திருத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் போன்றவை ஏற்கனவே எமது தண்டனைச் சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அங்கே உள்ளடக்கப்படாத விடயங்களையே நாம் இந்தச் சட்டத்தில் எதிர்பார்க்கிறோம். ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
இந்தச் சட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழுத்தம் கொடுப்பது குற்றம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம்

என்பதும் அரசு (State) என்பதும் இரண்டு வேறானவை. அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் கிளர்ச்சியாளர்கள். அவர்களின் இலக்கு அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளே தவிர, அவர்கள் பொதுமக்களைக் கொல்லமாட்டார்கள். ஆனால் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராகப் போரிடுபவர்கள், அவர்களின் இலக்கு அப்பாவிப் பொதுமக்கள். இந்த வேறுபாட்டைச் சட்டம் தெளிவாக விளக்க வேண்டும்.

மற்றொரு முக்கிய குறைபாடு என்னவென்றால், இதில் ‘அடிப்படைவாதம்’ (Fundamentalism) குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அடிப்படைவாதமே தீவிரவாதத்திற்கும், தீவிரவாதம் வன்முறைக்கும், வன்முறை பயங்கரவாதத்திற்கும் இட்டுச் செல்கிறது. எனவே, அடிப்படைவாத நிலையிலேயே அவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இதில் இல்லை.
இருப்பினும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருப்பது, அவர்களின் சீருடை அல்லது கொடிகளைக் காட்சிப்படுத்துவது குற்றம் எனக் கருதப்படுவது வரவேற்கத்தக்கது.

கடந்த காலத்தில் நாம் போரினால் பாதிக்கப்பட்டபோது, சர்வதேச நாடுகள் எம்மை பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறின. ஆனால் 2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னரே சர்வதேசத்தின் கண்கள் திறக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1373 வது தீர்மானத்தில் உள்ள விடயங்கள் அனைத்தும் இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். எனவே, நாம் முன்வைத்துள்ள இந்த முக்கியமான விடயங்களை அரசாங்கம் அவதானத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்