நாமக்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தவெக அரசின் பட்ஜெட் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அவர் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.
பட்ஜெட் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை:
செய்தியாளர்களிடம் பேசிய மு.வீரபாண்டியன், “தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நிச்சயமாக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை. இது ஒரு நிறைவான பட்ஜெட் அல்ல. இருப்பினும் இந்த அரசு ஒரு புதிய அரசு; அமைச்சர்கள் எல்லோரும் புதியவர்கள் என்பதால், நாம் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்,” என்று தெரிவித்தார்.
பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும்:
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான கோரிக்கையாகும். அரசின் நிதிநிலை தற்போது இடம் தராவிட்டாலும் கூட, படிப்படியாக முழுவதுமாக விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை அரசு கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசுக்கு வலியுறுத்தல்:
மேலும், “தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய உரிய நிதியை எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்,” எனவும் மு.வீரபாண்டியன் தனது பேட்டியில் கேட்டுக்கொண்டார்.
#MVeerapandian #CPI #TNBudget #TVKGovernment #ChiefMinisterVijay #ThalapathyVijay #Namakkal #FarmersLoanWaiver #TNPolitics #TamilNaduNews #TrendingTN #ViralNewsTN #LatestNewsTN #TNNewsUpdates