நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான காணாமல் போன சுற்றுலாப் பயணிகளைத் தேடும் தீவிர தேடுதல் வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. இத்துயர சம்பவத்தில் குறைந்தது 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
திபெத்திய எல்லையில் உள்ள பள்ளத்தாக்கில் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு, மண் மற்றும் இடிபாடுகள் காரணமாக டஜன் கணக்கான பிரித்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், குறைந்தது 33 பேர் காணாமல் போயுள்ளனர். போட்கோஷி நதிக்கரையில் தட்டையாக்கப்பட்ட கிராமங்களைத் தேடும் நேபாள தலைமையிலான தேடுதல் முயற்சிக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை (UN) தற்போது அவசரப் பொருட்களையும் பணியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
குறைந்தது 133 குடிமக்களைக் காணாமல் தவிக்கும் இந்தியா, நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் கனடா நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இமயமலை எல்லையில் மண் மற்றும் பாறைகளின் பாரிய சுவரொன்று ஆற்றில் இடிந்து விழுந்ததால், பெருமளவில் வெள்ளநீர் தேங்கிக் கொண்டது.