நீதித்துறை; ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்புக்கு எதிராக சர்வஜன வாக்கெடுப்பு தேவை

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக உயர்த்த அரசாங்கம் எடுக்கும் முயற்சி, நீதித்துறைக்குள் முன்னெடுக்கப்படும் ஒரு அப்பட்டமான அரசியல் தலையீடாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதற்குரிய சட்டத்திருத்தம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. இது மிகவும் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும்.

இந்த வயதெல்லை அதிகரிப்புக்கு எவ்வித நியாயமான காரணங்களும் கிடையாது. நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் வெளிப்பட்டு வரும் நிலையிலும் அரசாங்கம் இதையே செய்ய முயற்சிக்கிறது.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்துக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், தான் அளித்த எந்தவொரு பொய் வாக்குறுதியையும் நிறைவேற்றவோ அல்லது மக்களின் கனவுகளை நனவாக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு காரியமும் முற்றாகத் தோல்வியிலேயே முடிகிறது.

நாடு முழுவதிலும் வான்சன்னத்தனமான செயல்கள், ஊழல், மோசடி, திருட்டு, வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான பின்னணியில், முற்றாகத் தோல்வியடைந்துள்ள அரசாங்கம் தங்களை ஓரளவுக்கேனும் காப்பாற்றிக் கொள்ளவும், தமக்கு எதிராகச் செயல்படும் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை அடக்கவும் நோக்கமாகக் கொண்டே இந்த அரசியல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முற்படுகிறது. இது மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையாகும்.

அரசாங்கத்தின் இந்த ஆபத்தான நகர்வுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வரலாற்றில் இல்லாதவாறு சுமார் 4000 சட்டத்தரணிகள் பங்கேற்ற அவசர பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மேல்நீதிமன்ற நீதிபதிகள் சங்கமும் கொழும்புக்கு வருகை தந்து தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.

எந்தவொரு நீதிபதியோ அல்லது சட்டத்தரணியோ இந்தத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பொதுமக்கள், துறை சார்ந்த நிபுணர்கள் என எவருமே இதனை விரும்பாத நிலையில், அரசாங்கத்துக்கு மட்டுமே இது தேவையாக உள்ளது.

பெலவத்தையில் உள்ள தலைமைப்பீடத்துக்கு தேவை என்பதற்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றவோ அல்லது நீதித்துறையை அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப இயங்க வைக்கவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது ஜனநாயகத்தின் இறுதி ஊர்வலமாகவே அமையும்.

தற்போது உயர்நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்களும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்களும், கீழ் நீதிமன்றங்களில் 17 வெற்றிடங்களும் நிலவுகின்றன. வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கு இந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதே சரியான தீர்வாகும். அதை விடுத்து ஓய்வுபெறும் வயதை மட்டும் கூட்டுவதால் நீதித்துறையின் தற்போதைய பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லை.

இது ஒரு தவறான முன்உதாரணமாக அமையும் என்பதால், இவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவருவதாயின் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் வலியுறுத்துகின்றனர். நாட்டின் குடிமக்களுக்கு இதில் விருப்பமா இல்லையா என்பதைத் தெரிவிக்கும் உரிமை உண்டு.

எனவே, அரசாங்கம் இத்தகைய விளையாட்டுகளையும் பெலவத்தையின் உத்தரவுகளையும் உடனடியாக நிறுத்திவிட்டு, நாட்டிற்குப் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும் என்றார்.

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக