நாமல் ராஜபக்ச லண்டனில் பெற்ற சட்டமாணி பட்டம்; சான்றித கையொப்பத்தில் சிக்கல்?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அதிக விவாதம் நடந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற கல்வி வலைத்தளம் ஒன்று நாமல் ராஜபக்சவின் சட்டமாணிப் பட்டத்தை தரவரிசைப்படுத்தியுள்ளது.

அதில் நாமல் ராஜபக்ச City University of Londonஇல் பெற்ற சட்டப் பட்டப்படிப்பின் பழைய மாணவர்களது பட்டியலில் 45ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தை இங்கிலாந்தின் முன்னாள பிரதமர் மார்கரெட் தாட்சர் பெற்றுள்தோடு இரண்டாம் இடத்தை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த பட்டியல் சிட்டி பல்கலைக்கழத்தின் புகழ்பெற்ற பழைய மாணவர்கள் நூறு பேரின் யெர்களை உள்ளடக்கியது.

முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் நாமல் ராஜபக்ச லண்டனில் City University of London பெற்ற சட்டமாணி சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் சிக்கல் உள்ளது என்றும், சட்டக் கல்லூரி அதை ஏற்கவில்லை என்றும் அமைச்சர் சில ஆவணங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்த தரப்படுத்தல் விவகாரம் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ள நிலையில் சட்டமாணி பட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், நாமல் ராஜபக்ச லண்டனில் City University of London பெற்ற சட்டமாணி சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் சிக்கல் உள்ளது என்றும், சட்டக் கல்லூரி அதை ஏற்கவில்லை என்றும் அமைச்சர் சில ஆவணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட சான்றிதழை முதுகலைப் பட்டத்திற்கு பதிவு செய்வதற்காக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நாமல் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த பட்டச்சான்றிதழ் செப்டெம்பர் 15, 2009 அன்று வழங்கப்பட்டது, ஆனால் அந்த பட்டச்சான்றிதழில் கையொப்பமிட்ட துணைவேந்தர் ஜூலை 23 அன்று பதவி விலகியுள்ளார். அவர் பதவி விலகிய 54 நாட்களுக்குப் பிறகு, அந்த நபர் துணைவேந்தராக பட்டச் சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த லண்டன் நிறுவனம் அக்டோபர் 15, 2009 அன்று இலங்கை சட்டகல்லுாரியில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகக் கூறும் நாமல், செப்டம்பர் 25, 2009 அன்று சட்ட கல்லுாரியில் சேர விண்ணப்பித்தார்.

அவர் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த அதே நாளில் சட்டகல்லுாரி அதை ஏற்றுக்கொண்டது. அந்த நேரத்தில், லண்டன் சிட்டி யுனிவர்சிட்டி சட்ட கல்லுாரில் இருந்து ஒப்புதல் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்