நாட்டின் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு கொலை மிரட்டல் ; ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிறைக்கைதிகள் நாட்டின் சட்டரீதியான பராமரிப்பில் உள்ளவர்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்புக்கு முழுமையான பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

அண்மைக் காலத்தில் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அரசாங்கமும் பொறுப்பான அமைச்சர்களும் முன்வைக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவது, கைபேசிகள் பயன்படுத்தப்படுவது மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதே இத்தகைய அசம்பாவிதங்களுக்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இக்கூற்றானது, தங்களது கடமையையும் பொறுப்பையும் அரசாங்கம் சரியாக நிறைவேற்றவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. சிறைச்சாலைச் சுவர்களில் ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தாலும், சுவர்களுக்குள் மனித உரிமை மீறல்களுமே இடம்பெறுகின்றன.

பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினரின் தகவல்களைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் கூட அச்சுறுத்தப்படுகின்றனர். அரசாங்கத்தின் கூற்றை மட்டும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகவும் குரலற்றவர்களின் குரலாகவும் செயற்படும் அமைப்புகளை அடக்குமுறை மூலம் முடக்க நினைப்பது ஜனநாயகத்துக்குப் பேரபாயமாகும்.

குறிப்பாக, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளான சிரேஷ்ட சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் சுதேஷ் நந்திமால் ஆகியோருக்கு அண்மையில் கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு குழுவின் பெயரைப் பயன்படுத்தி, இந்த விவகாரங்களில் தலையிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடமும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கலாச்சாரத்தை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ், மீண்டும் இத்தகைய மிரட்டல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டமை அவர்களின் உரிமையாகும். தற்போதைய எதிர்க்கட்சிகள் கூட ஜெனீவா செல்வதாகக் கூறும் போது, சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் சர்வதேச ரீதியில் குரல் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு ஒருபோதும் அச்சப்படாது. இந்த அமைப்பு தனித்து செயற்படவில்லை; அவர்களது அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும், அவர்கள் எடுக்கும் எந்தவொரு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம். அரசாங்கம் இத்தகைய அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்