சென்னை
மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு நதிநீர் விவகாரம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் தென் மாநிலங்களின் வளர்ச்சி குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளை முன்வைத்தார்.
மாநாட்டில் அமித் ஷா உரையின் முக்கிய அம்சங்கள்:
-
நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வு: மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்கு ஜல் சக்தி மற்றும் உள்துறை அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பரஸ்பரப் பேச்சுவார்த்தை மூலம் விரைவாகத் தீர்வு காண வேண்டும்.
-
நதிகள் இணைப்பு: பிரம்மபுத்திரா முதல் காவிரி மற்றும் கோதாவரி வரையிலான முக்கிய நதிகளை இணைப்பதன் மூலம், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத நிலையை உறுதி செய்ய முடியும்.
-
தென்னிந்தியாவின் மாபெரும் பங்களிப்பு: விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் வாகன உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும் தென்னிந்தியா சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது; இதனால் இப்பகுதிக்கு அதிக அளவிலான அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
-
பெண்கள் பாதுகாப்பு & போக்சோ: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (POCSO) வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து முதலமைச்சர்கள் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
-
பள்ளி இடைநிற்றல் & ஊட்டச்சத்து: மாணவர்களின் பள்ளி இடைநிற்றலைக் குறைக்க அவர்களுக்குரிய ஊட்டச்சத்தை உறுதி செய்ய வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகளுக்குப் பாராட்டுகள்.
-
போதைப்பொருள் ஒழிப்பு: ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ என்ற இலக்கை அடைய உள்துறை அமைச்சகம் 3 ஆண்டு காலச் செயல்திட்டத்தை வகுத்துள்ளது. வருங்காலத் தலைமுறையைக் காக்க மாநில அரசுகள் அனைத்தும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
#AmitShah #SouthernZonalCouncil #ChiefMinisterVijay #JosephVijay #TVKGovernment #WaterDispute #RiverLinking #DrugFreeIndia #POCSO #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates