தமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் அசோக் செல்வன் – நிமிஷ சஜயன் ஆகியோர் கதையை வழி நடத்திச் செல்லும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.
ரொமான்டிக் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேசன் மற்றும் டொக்டர் ஐசரி கே கணேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும், விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.