தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  நேற்று செவ்வாய்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் உறவினரின் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் குறித்த சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுமி தொட்டிலில் தொங்கிகொண்டிருந்ததை கண்ட சிறுமியின் சகோதரன் அயலவர்களை அழைத்து கூறியதை அடுத்து சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றனர்.

எனினும், குறித்த சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தை சேர்ந்த 13 வயதுடை மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது .

குறித்த சிறுமி பொகவானை தமிழ் வித்தியாலயத்தில் ஏழாம் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிவித்தனர்.

ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபுது ஜிந்தக்க தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்