தொட்டலங்க கண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் கணபதி கணேஷ் எனப்படும் தொட்டலங்க கண்ணா மீது 2014 டிசம்பர் 26ஆம் திகதி சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணையின்போது பிரதிவாதிக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை தவிர்த்து வந்தநிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.