வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி நேற்று நேப்பியரில் நடந்தது. மழை காரணமாக தலா 34 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேம்பல் (4), அக்கீம் (22) ஜோடி துவக்கம் தந்தது. கீசி கார்டி (7), ரூதர்போர்டு (13), ராஸ்டன் சேஸ் (2) அடுத்தடுத்து அவுட்டாக, 86/5 ரன் என திணறியது. கிரீவ்ஸ் (22), ஷெப்பர்டு (22), போர்டே (21) சற்று உதவினர். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், பவுண்டரி மழை பொழிந்த கேப்டன் ஷாய் ஹோப், ஒருநாள் அரங்கில் 19 வது சதம் கடந்தார்.
நியூசிலாந்து அணி 33.3 ஓவரில் 248/5 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. கேப்டன் சான்ட்னர் (34), லதாம் (39) அவுட்டாகாமல் இருந்தனர். 3வது போட்டி ஹாமில்டனில் (நவ. 22) நடக்க உள்ளது.