தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்!

கிறிஸ் வோக்ஸ் பந்தை பாதத்தில் வாங்கி கடும் காயத்திற்கு ஆளான ரிஷப் பண்ட் இப்போது தனது கடைசி கட்ட மறுசிகிச்சைக் கட்டத்தில் இருக்கிறார். இந்த வார இறுதியில் உடற்தகுதி மதிப்பீட்டாய்விற்குத் தயாராக இருக்கிறார்.

இதனையடுத்து 2025-26 ரஞ்சி டிராபி சீசனின் 2வது பாதியில் ரிஷப் பண்ட் ஆடுகிறார். இது அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது. அதாவது நவம்பர் 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புமாறு அவர் இந்த ரஞ்சி போட்டிகளில் தன் திறமையையும் உடற்தகுதியையும் பரிசோதிக்கவுள்ளார்.

ஏற்கெனவே அஜித் அகார்க்கர் இது தொடர்பாக ரிஷப் பண்ட்டிடம் பேசியிருக்கிறார். ஆகவே தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புகிறார் என்னும் நற்செய்தி இப்போதைக்கு உறுதியாகியுள்ளது. அவரது கால் கட்டுக்கள் நீக்கப்பட்டு இப்போது பாதத்தை நன்றாக அசைக்க முடிகிறது, இயக்க முடிகிறது என்று கூறப்படுகிறது. கால்களுக்கான பிரத்யேக பயிற்சி மற்றும் உடல் எடை பயிற்றுவிப்புகளை இப்போது எடுத்துக் கொண்டுள்ளார்.அக்டோபர் 15ம் தேதி டெல்லி அணி ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆடத் தொடங்குகிறது. முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை ஹைதராபாத்தில் சந்திக்கிறது டெல்லி. 2வது ஆட்டம் ஹிமாச்சல் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் ஃபுல்டாஸை ரிவர்ஸ் ஸ்விப் ஆடப்போய் தேவையில்லாமல் காலில் வாங்கி கடும் காயமடைந்தார். கால் எலும்பு முறிந்தது. ஆனாலும் கால் முடியாமல் போனாலும் மீண்டும் இறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை மிட்விக்கெட்டில் அடித்த அந்த மெஜஸ்டிக் சிக்சரை யாரும் மறக்கவும் முடியுமோ?

ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியில் ரிஷப் பண்ட் 4 டெஸ்ட் போட்டிகளிலேயே 479 ரன்களை விளாசி இங்கிலாந்தில் ஒரு விக்கெட் கீப்பர் அதிக ரன்கள் என்ற சாதனையைச் செய்தார். இந்தத் தொடரில் 2 சதங்கள், மற்றும் 3 அரைசதங்கள் என்று இங்கிலாந்தை நொறுக்கும் பணியைத் தொடர்ந்தார்.

பண்ட் திரும்பியவுடன் டெல்லி அணியை முதலில் ரஞ்சி டிராபியில் வழிநடத்துவார், இப்போதைக்கு ஆயுஷ் பதோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்