தீர்வில்லையெனில் பணிப்புறக்கணிப்பு; மின்சாரசபை சேவையாளர் சங்கம்

மின்சாரசபையின் சேவையாளர்களின் தொழில் காப்புறுதியை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் மறுசீரமைப்பினை செயற்படுத்தி மின்சார சபையை சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்கள் குறித்து இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். தீர்வின்றேல் நிபந்தனையற்ற வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை மின்சார சபையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.

இலங்கை மின்சாரசபை நேற்று திங்கட்கிழமை (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக ஒன்றுகூடி தொழிற்சங்கத்தினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சங்கத்தின் பிரதான செயலாளர் பிரபாத் பிரியந்த குறிப்பிடுகையில்,

56 ஆண்டுகால பழமையான இலங்கை மின்சாரசபையை அரசாங்கம் சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ளது. 25 ஆயிரம் மின்சேவையாளர்களினதும், 72 இலட்சம் மின்பாவனையாளர்களின் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களுடன் முறையான கலந்துரையாடல்களில் ஈடுபடாமல் தான்தோன்றித்தனமான வகையில் மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மின்சாரசபையை 06 நிறுவன கட்டமைப்புக்குள் கொண்டு வருவதாகவும், மின்சேவையாளர்களை அந்த நிறுவனங்களில் பணியில் அமர்த்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஊழியர்களின் தொழில் காப்புறுதி தொடர்பில் எவ்வித உடன்படிக்கைகளும், கைச்சாத்திப்படவில்லை.

மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறோம். எமது தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.அத்துடன் நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்களுக்கு உடன் தீர்வு காண வேண்டும்.

இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி புதிய முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி அமைச்சுடன் இன்று 10ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். உறுதியான தீர்வு கிடைக்காவிடின் 25 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து நிபந்தனையற்ற வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

pet

அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்தது

March 10, 2026

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று இரவு (9) பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

in

ஈரானியக் கப்பலுக்கு அடைக்கலமளித்த இந்தியா

March 10, 2026

ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கியொன்றால் டொர்பிடோ மூலம் தாக்கப்பட்ட மூன்று நாள்களுக்கு முன்னர் ஈரானிய போர்க்கப்பல் ஐரிஸ் டெனாவை துறைமுகத்துக்கு வர

sri

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான தாக்குதல்களுக்கு சமனானவையே இப்போது உலக அரங்கில் நிகழ்த்தப்படுகின்றன

March 10, 2026

சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான்

rohitha ab

யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரோஹித்த அபேகுணவர்த்தன

March 10, 2026

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை

bathra

இஸ்ரேலுக்கே எமது பூரண ஆதரவு; இலங்கை – அமெரிக்க ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துங்கள் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

March 10, 2026

இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ எவ்வித தெளிவும்

ceb

தீர்வில்லையெனில் பணிப்புறக்கணிப்பு; மின்சாரசபை சேவையாளர் சங்கம்

March 10, 2026

மின்சாரசபையின் சேவையாளர்களின் தொழில் காப்புறுதியை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் மறுசீரமைப்பினை செயற்படுத்தி மின்சார சபையை சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள

gu

பெருந்தோட்ட அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க நியமனம்

March 10, 2026

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்