திரை நட்சத்திரங்கள் பங்கு பற்றும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’

தமிழ் திரை நட்சத்திரங்கள் பங்கு பற்றும் நட்சத்திர துடுப்பாட்ட அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என பெயரிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு நடிகர் ஆர்யா கப்டன் ஆக பணியாற்றுவார் என்றும், இந்த நட்சத்திர துடுப்பாட்ட போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் இந்தியாவில் தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய ரசிகர்கள் திரைத்துறை மற்றும் துடுப்பாட்ட விளையாட்டை அதிக அளவில் ரசித்து கொண்டாடுவார்கள். அதனை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் எனும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தமிழ் திரை நட்சத்திரங்கள் பங்கு பற்றும் சென்னை அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என பெயரிடப்பட்டிருப்பதாக அதன் புதிய உரிமையாளர்களான வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர்- வேல்ஸ் குழுமங்களின் தலைவர் – தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான டொக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் நடிகை – தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீ பிரியா ராஜ்குமார் ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அவர்கள் பேசுகையில், ” வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் தலைவராக நடிகர் ஆர்யாவும், வழிகாட்டியாக நடிகர் சரத்குமாரும், விளம்பர தூதராக நடிகை மீனாவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் தொடங்குகிறது. இதில் சென்னை -கொச்சி- பெங்களூரு- ஹைதராபாத் -மும்பை -என எட்டு அணிகள் பங்கு பற்றுகிறது” என்றனர்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் திரை நட்சத்திரங்களுடன் இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்களான லட்சுமிபதி பாலாஜி மற்றும் வீரர் முரளி விஜய், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிறுவனத் தலைவர் விஷ்ணு இந்தூரி உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.‌

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்