திரைப்பட விருதிற்கான நடுவர் குழு தெரிவு

திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு தனியார் அமைப்புகள் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி ஊக்குவிப்பதும், கௌரவிப்பதும் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில் தமிழ் திரைப்பட துறையினருக்கும் உலகம் முழுவதும் உள்ள இணையதள பார்வையாளர்களுக்கும் நன்கு அறிமுகமான’ டூரிங் டாக்கீஸ்’ எனும் நிறுவனம் – ‘ ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருதை வழங்க திட்டமிட்டு இருக்கிறது. விருதுகள் தரமான கலைஞர்களை சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்நிறுவனம் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் தலைமையில் நடுவர் குழு ஒன்றினை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

திரைப்பட பத்திரிக்கையாளர்- தயாரிப்பாளர் – இயக்குநர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் கொண்ட திரு. சித்ரா லட்சுமணன் இந்த விருதினை தொடங்கி இருக்கிறார்.‌

இவர் தன்னுடைய ‘டூரிங் டாக்கீஸ்’ எனும் யூட்யூப் சேனல் மூலமாக தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே . இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக தமிழ் திரைப்படத்துறைக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்க அவர் திட்டமிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சித்ரா லட்சுமணன் பேசுகையில், ” திரைப்பட துறையினருக்கு உத்வேகம் அளிப்பதற்கு ஏதேனும் செய்திட வேண்டும் என திட்டமிட்டேன். இதற்காகத்தான் ‘ ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருது’ எனும் பெயரில் விருது வழங்கப்படுகிறது. கலைஞர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் .. மேடையில் தோன்றி விருது பெறும்போது கிடைக்கும் கரவொலியை விரும்பாதவர்களே கிடையாது.

இதற்காக பொருத்தமான கலைஞர்களை தெரிவு செய்வதற்காக குழு ஒன்றினை அமைத்திருக்கிறோம். அந்த குழுவிற்கு இயக்குநர் கே. பாக்யராஜ் தலைவராக செயல்படுவார். இந்தக் குழுவில் திருமதி. குஷ்பூ சுந்தர் – திரு. இளவரசு – திரு. முரளி ராமசாமி- திரு. டி. சிவா – திரு ஆர். கே. செல்வமணி- திரு. ஆர். வி. உதயகுமார் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

இந்த ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருது சிறந்த பத்திரிக்கை தொடர்பாளர் – சிறந்த இயக்குநர் – சிறந்த கதாநாயகி- என ஐம்பதிற்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருது வழங்கப்பட உள்ளது. அத்துடன் சில பிரத்யேக பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதியன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.‌

திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்குவது என்பது தரம் குறைந்ததாகவும் மடினப்படுத்தப்பட்டு விட்டதாகவும், வணிகத்தனம் மிக்கதாகவும் கருதப்படும் இன்றைய சூழலில் முறையாக விருதுக்குரிய கலைஞர்களை தெரிவு செய்வதற்காக திரைத்துறையில் அனுபவம் மிக்க கலைஞர்களின் தலைமையில் குழு அமைத்து, விருதுக்குரிய கலைஞர்களை தெரிவு செய்யவிருப்பதால் இந்த ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருது நிச்சயமாக கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரைப்பட துறையினரும் எதிர்பார்க்கும் தரமான விருதாகவே திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்