சென்னை
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) அர்ச்சனா கல்பாத்திக்குத் தமிழ்நாடு அரசு முக்கியப் பதவி ஒன்றை வழங்கியுள்ளது.
அறங்காவலர் தேர்வுக்குழுவில் நியமனம்:
தற்போதைய தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்த ‘பிகில்’, ‘கோட்’ (GOAT) உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம் ஏஜிஎஸ். இந்நிலையில், இந்நிறுவனத்தின் சிஇஓ-வான அர்ச்சனா கல்பாத்திக்குத் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகக் கோவில்களுக்கு மரபுசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் மாநிலக் குழுவில் அவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலக் குழு உறுப்பினர்களின் முழு விவரம்:
இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேலுள்ள திருக்கோவில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து உரிய பெயர்ப்பட்டியலைத் தயாரித்து அளித்திடப் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட மாநிலக் குழுவினை அமைத்து அரசு அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டுள்ளது:
-
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் (பொம்மபுரம் ஆதினம், மயிலம்) – தலைவர்
-
டாக்டர் கே.ராமநாதன் (ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி) – துணைத் தலைவர்
-
அர்ச்சனா கல்பாத்தி அகோரம் – உறுப்பினர்
-
ப.ரா.சம்பத், இ.ஆ.ப. (ஓய்வு) – உறுப்பினர்
-
மா.சுமதி (எ) சுமதிஸ்ரீ – உறுப்பினர்
-
த.வேல்முருகன் – உறுப்பினர்
-
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் – பதவி வழி உறுப்பினர் / செயலர்.
#ArchanaKalpathi #AGSEntertainment #HRCE #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #TamilNaduNews #TNPolitics #Chennai #TrendingTN #ViralNewsTN #LatestNewsTN #TNNewsUpdates