திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த எஸ். நிரோஜன் (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜீவராணி (47) என்பவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.vv